search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீ வைப்பு"

    மகாராஷ்டிராவில் கட்டுமானப் பணிகளுக்காக கொண்டு வரப்பட்ட டிராக்டர்கள், ஜேசிபி போன்ற வாகனங்களுக்கு நக்சலைட்கள் தீ வைத்துள்ளனர். #Maharashtra #Naxalsblaze
    கட்சிரோலி:

    மகாராஷ்டிராவின் கட்சிரோலி மாவட்டத்தில் இன்று காலை சாலையோரம் கட்டிட வேலைக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கு நக்சலைட்கள் தீ வைத்தனர். இச்சம்பவம் கோர்சி தாலுகாவில் டோங்கார்கான் புறக்காவல் நிலையத்திற்கு அருகே   நடந்துள்ளது.

    12 நபர்கள் கொண்ட மாவோயிஸ்டுகள் குழு, கட்டுமான பணிகளுக்காக சாலை ஓரம் நின்று கொண்டிருந்த 4 டிராக்டர்கள் மற்றும் 2 ஜேசிபிக்கு தீ வைத்துள்ளனர். மேலும் இவர்கள் சாலையில் மரக் கிளைகளை வெட்டிப்போட்டு போக்குவரத்தினை தடை செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சம்பவ இடத்தில் மாவோயிஸ்டு அமைப்பின் பேனர்கள் கிடந்துள்ளன. இதன்மூலம், கட்சிரோலியின் வடகிழக்கு பகுதியைச் சேர்ந்த மாவோயிஸ்டுகள் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    ஜனவரி 25 முதல் 31 வரை நக்சல் வாரமாக மாவோயிஸ்டுகள் அனுசரிக்கின்றனர். இந்த காலகட்டத்தில் நக்சலைட்கள்,  கூட்டங்கள் நடத்தி பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர். மேலும் பொது சொத்துக்கள், சாலைகள் மற்றும் பாதுகாப்புப் படைகளின் மீதான தாக்குதல்களை நடத்துதல், புதிய உறுப்பினர்களை சேர்த்தல், மறு ஆய்வு செய்தல் போன்ற செயல்களிலும் ஈடுபடுவது குறிப்பிடத்தக்கது.  #Maharashtra #Naxalsblaze

    மீஞ்சூர் அருகே மண்புழு வளர்ப்பு மையத்துக்கு மர்ம நபர்கள் தீ வைத்த சம்பவம் விவசாயிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    பொன்னேரி:

    மீஞ்சூரை அடுத்த பெரிய முல்லைவாயில், எட்டியம்மன் கோவில் தெருவில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் மண்புழு வளர்ப்பு மையம் உள்ளது.

    இங்கு வளர்க்கப்படும் மண்புழுக்கள் மீஞ்சூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. இந்த மையம் சிறிய கொட்டகை அமைத்து செயல்பட்டு வந்தது.

    இந்த நிலையில் இன்று காலை மண்புழு வளர்ப்பு மையத்தின் மேற்கூரை திடீரென தீப்பற்றி எரிந்தது. சிறிது நேரத்தில் கொட்டகை முழுவதும் எரிந்து சாம்பலானது.

    மர்ம நபர்கள் தீ வைத்து தப்பி இருப்பது விசாரணையில் தெரிய வந்தது. இது குறித்து மீஞ்சூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவையில் இன்று அதிகாலை பா.ஜனதா பிரமுகர் கடைக்கு பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Fireaccident
    கோவை:

    கோவை ரத்தினபுரியை சேர்ந்தவர் புவனேஷ்வரன்(வயது 35). இவர் பா.ஜனதா கட்சியின் கணபதி மண்டல பொதுச் செயலாளராக உள்ளார்.

    காந்திபுரம் 7-வது விரிவாக்க வீதி, டாக்டர் ராதா கிருஷ்ணன் ரோடு சந்திப்பு பகுதியில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார்.

    இன்று அதிகாலை 3.20 மணி அளவில் மர்மநபர்கள் 2 பேர் சென்று இவரது கடையின் ‌ஷட்டர் கதவை லேசாக உயர்த்தி கடைக்குள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். இதில் கடை தீ பிடித்து, கண்ணாடிகள் வெடித்து சிதறியது.

    ஜவுளிக்கடையில் இருந்து பெரும் புகை வருவதை கண்ட அக்கம்பக்கத்தினர் புவனேஷ்வரனுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் ரத்தினபுரி போலீசில் புகார் செய்தார். சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்றனர். அதற்குள் கடையில் பிடித்த தீ அணைந்து விட்டது. இதில் கண்ணாடி உடைந்தும், ஜவுளிகள் எரிந்தும் நாசமாயின.

    சம்பவ இடத்தில் மாநகர போலீஸ் துணை கமி‌ஷனர் லட்சுமி, உதவி கமி‌ஷனர் சுந்தர்ராஜ், இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். கடை முன்பு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

    அதில் 2 பேர் கடைக்கு பெட்ரோல் ஊற்றி தீ வைக்கும் காட்சிகள் பதிவாகி இருந்தது. அதில் ஒருவர் ஹெல்மெட் அணிந்துள்ளார். மற்றொருவர் ‘மங்கி குல்லா’ அணிந்து முகத்தை மறைத்துள்ளார். அவர்கள் யார்? எதற்காக தீ வைத்தார்கள்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தீ வைத்தவர்கள் கடையில் இருந்து சிறிது தூரத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு வந்துள்ளனர். கடைக்கு தீ வைத்த பின்பு மோட்டார் சைக்கிளில் ஏறிச் செல்கின்றனர். இந்த காட்சிகளை வைத்து போலீ சார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத் துக்கு தடய அறிவியல் நிபுணர் கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    ரத்தினபுரியை சேர்ந்தவர் மோகன். பா.ஜனதா வார்டு பொறுப்பாளரான இவர் காந்திபுரம் 100 அடி சாலை யில் வெல்டிங் கருவிகள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவரது கடைக்கு மர்மநபர்கள் 2 பேர் தீ வைத்துள்ளனர்.

    இந்த கடை முன்பு இருந்த கண்காணிப்பு காமிரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரித்தனர். இந்த கடைக்கு தீ வைத்த அதே நபர்கள் தான் புவனேஷ்வரனின் கடைக்கும் தீ வைத்திருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர் களை போலீசார் தேடி வருகின்றனர்.  #Fireaccident

    இங்கிலாந்து நாட்டில் லீட்ஸ் நகரத்தில் பீஸ்டன் ஹார்டி வீதியில் உள்ள ஜாமியா மஸ்ஜித் அபு ஹூரைரா மசூதிக்கு சமூக விரோத சக்திகள் தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Mosque #SikhGurdware
    லண்டன்:

    இங்கிலாந்து நாட்டில் லீட்ஸ் நகரத்தில் பீஸ்டன் ஹார்டி வீதியில் உள்ள ஜாமியா மஸ்ஜித் அபு ஹூரைரா மசூதிக்கு நேற்று முன்தினம் உள்ளூர் நேரப்படி அதிகாலை 3.45 மணிக்கு சமூக விரோத சக்திகள் தீ வைத்து விட்டனர்.

    அடுத்த சில நிமிடங்களில் லேடி பிட் சந்து பகுதியில் அமைந்து உள்ள சீக்கியர்களின் வழிபாட்டுத்தலமான குருநானக் நிஷ்கம் சேவாக் ஜாதா குருத்வாராவுக்கும் விஷமிகள் தீ வைத்து விட்டனர். குருத்வாராவின் கதவில் ஒரு பாட்டில் பெட்ரோலை ஊற்றி விஷமிகள் தீ வைத்ததாக தகவல்கள் கூறுகின்றன. தீயணைப்பு படையினர் விரைந்து வந்து மசூதியிலும், குருத்வாராவிலும் தீயை அணைத்தனர்.

    லீட்ஸ் நகர சி.ஐ.டி. போலீஸ் இன்ஸ்பெக்டர் ரிச்சர்டு ஹோம்ஸ் இந்த சம்பவங்கள் பற்றி குறிப்பிடுகையில், “இவ்விரு சம்பவங்களும் அருகருகே நடந்து உள்ளன. ஒன்றுக்கொன்று தொடர்பு இருக்கும் என சந்தேகிக்கிறோம். இது விசாரணையின் ஆரம்ப காலம்தான். இவ்விரு சம்பவங்களும், வெறுப்புணர்வு சம்பவங்கள் என்றே கருதுகிறோம். தொடர்ந்து விசாரணை நடத்துகிறோம்” என கூறினார்.

    மேலும், சம்பவ பகுதியில் அமைந்து உள்ள ரகசிய கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆராய்ந்து அதன் அடிப்படையில் துப்பு துலக்குவதாகவும் அவர் கூறினார்.

    இந்த சம்பவங்களை தொடர்ந்து லீட்ஸ் நகரில் போலீஸ் ரோந்துப்பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாக அங்கு இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
     #Mosque #SikhGurdware  #tamilnews
    தூத்துக்குடி அருகே அரசு பேருந்துக்கு தீ வைக்கப்பட்டதில் 56 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தீ வைத்த மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    செய்துங்கநல்லூர்:

    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டுக்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் நடந்து வருகின்றன. நேற்று தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் முழுஅடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. அவர்கள் பல்வேறு இடங்களில் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் செய்துங்கநல்லூர் அருகே உள்ள கருங்குளத்தில் அரசு பஸ்சுக்கு தீவைக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. உடன்குடியில் இருந்து நெல்லை நோக்கி நேற்று மாலை அரசு பஸ் ஒன்று வந்தது. அந்த பஸ்சை டிரைவர் ரமேஷ் என்பவர் ஓட்டி வந்தார். கண்டக்டராக லட்சுமணன் இருந்தார். பஸ்சில் மொத்தம் 56 பயணிகள் இருந்தனர்.

    அந்த பஸ் செய்துங்கநல்லூர் அருகே உள்ள கருங்குளம் புதுபாலம் அருகில் வந்த போது அந்த வழியாக 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்மநபர்கள் 3 பேர் பெட்ரோல் கேனுடன் வந்து அந்த பஸ்சை வழிமறித்து நிறுத்தினர். இதையடுத்து பஸ்சை டிரைவர் நிறுத்தினார். அப்போது அவர்களில் 2 பேர் பஸ்சின் படிக்கட்டுகளில் மறைத்தபடி நின்றனர்.

    ஒருநபர் மட்டும் பஸ்சுக்குள் ஏறி பெட்ரோலை ஊற்றினார். அவரை அந்த பஸ்சில் பயணித்து வந்த செய்துங்கநல்லூர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரியும் ராம்பிரகாஷ் என்பவர் தடுத்தார் ஆனால் அதனையும் மீறி அந்த நபர் பெட்ரோலை ஊற்றி தீவைத்தார். இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் போட்டிபோட்டுக்கொண்டு பஸ்சில் இருந்து கீழே இறங்கி ஓடினர்.

    அப்போது பஸ்சில் இருந்து கீழே இறங்க முயன்ற மெஞ்ஞானபுரம் நவலடிபுதூரை சேர்ந்த சுடலை கோனார் (வயது 78), அவருடைய மனைவி வள்ளியம்மாள் (63) தீயில் சிக்கினர். அவர்களை அதே பஸ்சில் வந்த காரைக்குடியை சேர்ந்த ஜெபகுமார் (23) மீட்க முயன்றார். இந்த சம்பவத்தில் அவர்கள் 3 பேரும் தீக்காயம் அடைந்தனர்.



    பஸ்சுக்கு தீவைத்த மர்மநபர்களும் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளில் ஏறி கண் இமைக்கும் நேரத்தில் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டனர். பெட்ரோல் ஊற்றி தீவைக்கப்பட்டதால் பஸ் கொழுந்து விட்டு எரிந்தது. அவர்கள் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    பஸ்சுக்கு தீவைக்கப்பட்டதும் அதிலிருந்த 56 பயணிகள், டிரைவர், கண்டக்டர் உடனடியாக இறங்கியதால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஸ்ரீவைகுண்டம் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு வந்து, பஸ்சில் பிடித்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. இருப்பினும் பஸ் முழுவதும் எரிந்து எலும்புக்கூடானது.

    இதற்கிடையே தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா, ஸ்ரீவைகுண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசாரும், தாசில்தார் தாமஸ் பயஸ் அருள் மற்றும் அரசு போக்குவரத்து கழக பணிமனை அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பஸ்சுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவத்தால் அந்த பகுதியில் பதற்றம் நிலவுவதால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    பஸ்சுக்கு தீவைத்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். அவர்களை கண்டுபிடிக்க ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு சகாயஜோஸ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    தனிப்படை போலீசார் தீவைப்பு சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களில் இருவர் வேஷ்டி அணிந்தும், மற்றொருவர் பேண்ட் அணிந்தும் இருந்துள்ளார். வேறு எந்த அடையாளங்களும் அந்த நபர்களை பற்றி தெரியவில்லை. மேலும் அவர்கள் தப்பிச்சென்ற மோட்டார் சைக்கிள் எண்ணை பயணிகள் குறித்து போலீசாரிடம் கொடுத்துள்ளனர். அதனை வைத்தும் மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    தீக்காயம் அடைந்தவர்களில் வள்ளியம்மாளுக்கு மட்டும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    தூத்துக்குடியில் போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தி பல உயிர்களை பலி வாங்கிய நிலையில், இன்று போலீஸ் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் பதற்றத்தை உருவாக்கியது. #SterliteProtest #PoliceVehiclesTourched
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின்போது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சிலரது உடல்நிலை மோசமாக உள்ளது. துப்பாக்கி சூட்டைக் கண்டித்து பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றன. தூத்துக்குடி நகரம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. 144 தடை உத்தரவும் நீட்டிக்கப்பட்டுள்ளது.



    துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் உடல்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது மருத்துவமனை வளாகத்தில் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். மருத்துவமனை வளாகத்தில் போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்கியதில் காவல்துறையினரின் பேருந்து மற்றும் கார் கண்ணாடிகள் உடைந்தன. இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

    இதற்கிடையே தூத்துக்குடி பிரைன் நகரில் சாலையோரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த போலீஸ் வாகனங்களுக்கு  தீவைக்கப்பட்டது. இதனால் பதற்றம் மேலும் அதிகரித்தது. ஒரு பேருந்தில் பற்றிய தீ சிறிது நேரத்தில் அணைக்கப்பட்டுவிட்டது. மற்றொரு பேருந்தில் பிடித்த தீ கொழுந்து விட்டு எரிந்ததால் அருகில் செல்ல முடியவில்லை. இதையடுத்து அருகில் உள்ள வீடுகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேறும்படி போலீசார் அறிவுறுத்தினர். #SterliteProtest #PoliceVehiclesTourched

    ×